சென்னை வருமானவரித்துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.40,000 சம்பளம்!

சென்னை வருமானவரி அலுவலகத்தில் Young Professionals வேலைக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை வருமான வரி அலுவலகத்தில் Young Professionals வேலைக்கு 4 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து இளநிலை அல்லது முதுநிலை சட்டம் பயின்று இருக்கவேண்டும். 3 வருட எல்.எல்.பி அல்லது 5 ஆண்டு ஒருங்கிணைந்த எல்.எல்.பி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். சார்ட்டர் அக்கவுண்ட் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

ஒப்பந்த அடிப்படையிலான இந்தப் பணிக்கு மாதம் ரூ.40,000 ஊதியம் அளிக்கப்படும். 35 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்க முடியாது. தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

www.tnincometax.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பிவைக்க வேண்டும்.

The Deputy Commissioner of Income-tax (Hqrs)(Admn), Room No. 110, 1st Floor, O/o Pr.Chief Commissioner of Income-tax, TN&P.No. 121, M.G. Road, Nungambakkam என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

அதேபோல் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அவற்றின் ஸ்கேன் செய்து chennai.dcit.hq.admin@incometax.gov.in மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம். மெயில் சப்ஜெக்ட்டில் “APPLICATION FOR YP” என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படும். இது குறித்த தகவல் விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சலுக்கே அனுப்பப்படும்.

விண்ணப்பங்கள் சென்று சேரவேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 11.