வீடியோ பார்த்தபோது செல்போன் வெடித்து சிறுமி உயிரிழப்பு

வீடியோ பார்த்துக்கொண்டு இருந்தபோது செல்போன் வெடித்ததில் எட்டு வயது சிறுமி பரிதாப உயிரிழப்பு

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருவில்மலை பட்டிப்பரம்பு பகுதியை சேர்ந்தவர் அஷோக்குமார். இவரது 8 வயது மகள் ஆதித்யஸ்ரீ திருவில்மலையில் உள்ள கிறிஸ்ட் நியூ லைஃப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.

இந்தச் சூழலில் பள்ளி கோடைவிடுமுறை அளித்திருக்கும் நிலையில் வீட்டில் இருந்த சிறுமி அவரது தந்தையின் செல்போனில் வீடியோ கேம் விளையாடுவது, வீடியோக்களை பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல இன்று ஆதித்யஸ்ரீ செல்போனில் வீடியோ பார்த்துக்கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக செல்போன் வெடித்து சிதறியதில், சிறுமி படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழ்ந்திருக்கிறார்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பழையனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறனர்.