கேரளாவின் இளம் அரசியல் தம்பதியான ஆர்யா ராஜேந்திரன்:கேகே சச்சின் தேவுக்கு பெண் குழந்தை. ட்விட்டரில் குவியும் வாழ்த்து மழை!

கேரளாவின் இளம் அரசியல் தம்பதியான ஆர்யா ராஜேந்திரன் – கேகே சச்சின் தேவுக்கு பெண் குழந்தை: ட்விட்டரில் குவியும் வாழ்த்து மழை!

கேரளாவின் திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் மற்றும் பலுசேரி தொகுதி எம்.எல்.ஏவான சச்சின் தேவ் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

கேரளாவின் இளம் மேயரான ஆர்யா ராஜேந்திரனுக்கும், இளம் எம்.எல்.ஏவான சச்சின் தேவுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அவர்களது திருமணத்தில் கலந்துகொண்டு இளம் தம்பதிகளை வாழ்த்தியிருந்தனர்.

இந்நிலையில் இந்த இளம் அரசியல் தம்பதிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு அரசியல் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.