கோடைகாலத்தில் கிடைக்கும் கிர்ணி பழத்தில் புரதச்சத்துகளும் நுரையீரலைப் பாதுகாக்கும் வைட்டமின்களும் இருக்கிறன.
தர்பூசணி பழத்தைப் போலவே கோடை காலத்தில் நமக்கு கிடைக்கும் பழம் முலாம்பழம் என சொல்லக்கூடிய கிர்ணி பழம்.
கிர்ணி பழத்தின் ஆரஞ்சு நிற சதைப்பற்றான பகுதியில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ, ஈ, சி, பீட்டா கரோட்டின், பொட்டாசியம், மாங்கனீஸ் ஆகியவை நிறைந்துள்ளன. அமெரிக்காவின் கான்சாஸ் ஸ்டேட் யூனிவர்சிட்டியின் ஊட்டச்சத்து துறை 2003 ஆம் ஆண்டு நடத்திய ஒரு ஆய்வில், சிகரெட் புகைப்பவர்களின் நுரையீரல்களில் ஏற்படும் பாதிப்பை, வைட்டமின் ஏ மீட்டமைப்பின் மூலம் ஓரளவு சீர்செய்ய முடியும் என்று கண்டறிந்தார்கள். இதற்கு வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். அதன் பிறகு, உலக உடல்நல அமைப்பு, நுரையிலின் ஆரோக்கியத்துக்கு நன்மையளிக்கும், தலைசிறந்த உணவுகளில் கிர்ணி பழத்தை முதலாவதாக பட்டியலிட்டது.
இந்தப் பழத்தில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால், கண்ணின் விழித்திரை சேதமடைவதை, அதாவது வயதாவதால் பார்வைக் குறைவு ஏற்படுவதைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மிகமிகக் குறைவான கிளைசிமிக் இண்டெக்ஸ் இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு நன்கு பலனளிக்கக் கூடியது.
இதன் ஜூஸ் நிறைந்த சதைப்பகுதியில், கரையக் கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதனால் தினசரி உணவில், கிர்ணி பழத்தை அதிகமாக சேர்த்துக் கொள்வதால், மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்களுக்கும் நல்லது.
கிர்ணி பழத்தின் வாசனையை வைத்தே அது பழுத்திருக்கிறதா என்பதை கண்டறிந்து வாங்கலாம். அதேபோல கிர்ணி பழத்தை வெட்டிய உடனே சாபிட்டுவிட வேண்டும். இல்லையென்றால் அதில் இருக்கும் சத்துக்கள் குறைந்துவிடும். அதனால் வெட்டி வைத்து நீண்ட நேரம் ஆன பிறகு கிர்ணி பழத்தை சாப்பிடுபதில் எந்த பயனும் இல்லை.