தமிழ்நாடு சுகாதாரத்துறையில் லேப் டெக்னீஷியன், இசிஜி டெக்னீசியன் வேலை!

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறையில் லேப் டெக்னீஷிய, இசிஜி டெக்னீஷியன் வேலைக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறையில் LABORATORY TECHNICIAN GRADE – III, Technician Grade–I, ECG Technician ஆகிய வேலைகளுக்கு 116 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

LABORATORY TECHNICIAN GRADE – III வேலைக்கு 18 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் Medical Laboratory Technology-யில் ஒருவருட பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் நல்ல உடல் தகுதி, பார்வை திறன் மற்றும் வெளியே சென்று வேலை செய்யும் அளவுக்கு தகுதி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க வயது உச்சவரம்பு கிடையாது. மாதம் ரூ.13,000 ஊதியம் வழங்கப்படும்.

Technician Grade – I வேலைக்கு 3 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, Pharmacy பாடப்பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை ஊதியம் அளிக்கப்படும். பொது பிரிவினருக்கு 42 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு வயது உச்சவரம்பு கிடையாது.

ECG Technician வேலைக்கு மொத்தம் 95 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், பொது பிரிவினருக்கு 29 இடங்களும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 24 இடங்களும், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய பிரிவினருக்கு 4 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 20 இடங்களும், ஆதி திராவிடர் பிரிவினருக்கு 14 இடங்களும், அருந்ததியர் பிரிவினருக்கு 3 இடங்களும், பழங்குடியினர் பிரிவினருக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் Electro Cardiogram அல்லது Treadmill Technician ஆகியவற்றில் ஒரு வருட சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

இந்தப் பணிக்கு ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை ஊதியம் வழங்கப்படும். 1.7.2023ம் தேதியின்படி 32 வயதுக்குள் இருக்கும் பொது பிரிவினர் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் என்றால் 42 வயது வரையும், முன்னாள் ராணுவ வீரர்கள் என்றால் 50 வயது வரையும் தளர்வு அளிக்கப்படுகிறது. கணவரை இழந்த கைம்பெண்கள் என்றால் 59 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

தகுதியானவர்கள் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 21.