லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு:இணைய வழியாக பங்கேற்கிறார்:பிரதமர் மோடி!

சந்திரயான் -3 விண்கலத்தில் செலுத்தப்பட்ட லேண்டர் இன்று தரையிறங்கும் நிகழ்வை பிரதமர் மோடி இணைவழியாக பங்கேற்க உள்ளார்.

சந்திரயான்-3 விண்கலமானது எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் ஒரு மாத பயணத்தை தொடர்ந்து, விண்கலத்தில் செலுத்தப்பட்ட விக்ரம் லேண்டரும், அதனுள் இருக்கும் ரோவர் சாதனமும் இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவுள்ளது. இந்த நிகழ்வை மாலை 5.20 முதல் இஸ்ரோ நேரலை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, இஸ்ரோ நிகழ்வில் இணையவழியில் பங்கேற்கவுள்ளார். லேண்டரும், அதனுள் இருக்கும் ரோவர் சாதனமும் வெற்றிகரமாக தரையிறங்கும்பட்சத்தில், நிலவின் தென் துருவத்துக்கு அருகே தடம்பதித்த உலகின் முதல் நாடாக இந்தியா உருவெடுக்கும்.