Low Carb Foods: உடல் எடை குறைக்க கார்போ ஹைட்ரேட் குறைவான உணவு!

உடல் எடை குறைக்க கார்போ ஹைட்ரேட் குறைவான உணவுகள் பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.

உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் கார்போ ஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளடங்கி இருக்கும் உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும். புரதம் அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. ஏனெனில் கார்போ ஹைட்ரேட்டுகள் உடலுக்குத் தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது.அதனை அதிகம் உட்கொண்டால் உடல் பருமனை ஏற்படுத்தி விடும் என்ற விவாதம் முன் வைக்கப் படுகிறது.

ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு உட்கொள்ளும் உணவில் கலோரிகள் குறைவாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது. கார்போ ஹைட்ரேட்டுகளை அறவே தவிர்க்க வேண்டியதில்லை. அதுவும் போதுமான அளவில் இடம் பெற வேண்டும்.

உடல் எடை குறைப்பு விஷயத்தில் உலவும் மேலும் சில கட்டுக்கதைகள் குறித்து பார்ப்போம்.

புரதம் உட்கொள்வது உடல் எடையை குறைக்கும் போது நுண்ணூட்டச் சத்துக்கள் அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அவற்றுள் புரதம் மேக்ரோ நுண்ணூட்டச் சத்துகளை கொண்டுள்ளவற்றுள் முக்கியமானதாகும். இதனை உட்கொள்வது நீண்ட நேரத்திற்கு புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும்.

அதே வேளையில் புரதத்தையே முதன்மையான உணவாக உட்கொள்ளக் கூடாது. அப்படி புரதத்தை அதிகமாக உட்கொள்வது சருமம் வறட்சி அடைவதற்கு வழிவகுக்கும்.

சில தேவையற்ற உடல்நல பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும். அதனை தவிர்க்க காலை உணவுடன் புரதத்தை சேர்த்துக் கொள்ளலாம்.

உடற்பயிற்சி செய்யும் சமயங்களிலும் உட்கொள்ளலாம். உணவு உட்கொள்வதை தவிர்ப்பது விரதம் இருப்பது அல்லது பட்டினி கிடப்பது உடல் எடையை விரைவாக குறைக்க உதவும் என்பது முற்றிலும் கட்டுக்கதை தான்.

பட்டினி கிடப்பது, குறைவாக சாப்பிடுவது, சில உணவுகளை அறவே தவிர்ப்பது உடல் எடை இழப்புக்கான யுக்தி அல்ல.

அப்படி சில நாட்கள் உணவுக் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து விட்டு மீண்டும் பழையபடி உணவு உட்கொள்ள தொடங்கியதும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விடுவீர்கள்.

இதனால் உடல் எடை அதிகரிக்கத் தான் செய்யும். சீரான இடைவெளியில் உணவு உட்கொள்வதே சிறந்தது. அது பசியை தூண்டாது. அதனால் அடிக்கடி சாப்பிடும் எண்ணம் தோன்றாது.

உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும். சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு சாப்பிடாதது உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி செய்பவர்கள் சூரியன் மறைந்த பிறகு உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.

இதுவும் உண்மையல்ல. ஒருவருடைய உடலில் கலோரிகள் அதிகம் சேரும் போது தான் உடல் எடை அதிகரிக்கும்.

ஏற்கனவே உடலில் கலோரிகள் குறைவாக இருக்கும் பட்சத்தில் சூரியன் மறைந்த பிறகு சாப்பிடுவது உடலுக்கு எந்தவொரு தீங்கையும் விளைவிக்காது.

தூங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பு சாப்பிடுவது இரவு தடையற்ற தூக்கம் பெற உதவும். உடல் எடையை குறைப்பதற்கும் உதவும்.

மாத்திரைகள் சாப்பிடுவது உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு உடல் எடையை குறைப்பதற்குரிய மாத்திரைகள் புழக்கத்தில் இருக்கின்றன.

பவுடர், டானிக்குகள் வடிவிலும் கிடைக்கின்றன. அவை உடல் எடையை குறைக்க உதவும் என்று நம்பப்படுகிறது. ஆனால் அதுவும் கட்டுக்கதை தான்.

ஏனெனில் சரியான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, போதுமான தூக்கம் ஆகியவற்றை பின்பற்றி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்ந்தால் மட்டுமே மாத்திரைகள் வேலை செய்யும்.

உடல் எடை குறைக்க கார்போ ஹைட்ரேட் குறைவான உணவு !

இல்லாவிட்டால் அதனை உட்கொள்வதில் பயனில்லை. மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகள், டானிக்குகளை உட்கொள்வதும் தவறானது.

நச்சு நீக்கும் பானங்கள் பருகுவது ‘டீடாக்ஸ்’ எனப்படும் பானங்கள் உடல் எடையை குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது.

உடலில் உள்ள நச்சுக்களையும் நீக்கவும் உதவும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இதுவும் கட்டுக்கதை தான்.

டீடாக்ஸ் பானங்கள் உடலுக்கு தேவையான ஓய்வை அளிக்கலாம். இருப்பினும் உடலில் உள்ள கொழுப்பை முழுமையாக நீக்குவதற்கு உதவாது. வழக்கமான உணவுப்பழக்கத்தை கடைப்பிடித்தாலே போதுமானது.