கோடைகால நோய்களைத் தடுக்கும் மாம்பழம்! – Seasonal Fruits Series

கோடை காலத்தில் ஏற்படும் அம்மை மாதிரியான நோய்கள் வராமல் தடுக்கும் மாம்பழத்தில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி வைட்டமின்கள்!

கோடை காலத்தில் தாராளமாக கிடைக்கும் பழவகைகளில் மாம்பழம் முதல் இடத்தில் இருக்கிறது. தமிழர்களின் கலாச்சாரத்தில் முக்கனிகளில்… மா, பலா, வாழை என முதல் இடத்தில் இருப்பதுவும் மா.

அதுவும் கோடை வெப்பம் தகிக்கும் இந்த காலநிலைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, ஏகப்பட்ட நோய்கள் பரவத் தொடங்கி இருக்கின்றன. அதிலும் குறிப்பாக அம்மை மாதிரியான நோய்கள் கோடைகாலங்களில் தான் அதிகம் பரவத் தொடங்குகிறது.

இப்படியான காலகட்டங்களில் மாம்பழம் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து நம்மை நோயில் இருந்து காப்பாற்றுகிறது. ஆம், மாம்பழத்தில் இருக்கு வைட்டம் சி, ஏ ஆகிய புரதச்சத்துகள் நம்முடைய உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை நீராக வைத்திருப்பதோடு, எந்த நோய்களும் நம்மை அண்டவிடாமல் காக்கிறது.

அதேபோல, மாம்பழத்தில் அதிக அளவில் கரோட்டின் சத்து இருப்பதால் பார்வைத்திறனை மேம்படுத்துகிறது… கண்களின் ஏற்படும் நோய்களை காக்கிறது.

மாம்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை போக்குகிறது. மேலும் அதில் இருக்கும் கனிமங்கள், பாலிபீனால் ஃபிளேவனாய்டுகள், குடல் மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் கேன்சர்களுக்கு எதிராக போராடுகிறது.

மாம்பழம் சாப்பிட்டால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும் கோடை காலங்களில் முகத்தில் கட்டி, பருக்கள் அதிகரிக்கும் என சிலர் நினைக்கலாம். ஆனால், சில குறிப்பிட்ட மாம்பழங்களை தோல் நீக்கிவிட்டு சாப்பிட்டால் உடல் உஷ்ணம் ஏற்படாது. மேலும், அளவுக்கு அதிகமாக மாம்பழத்தைச் சாப்பிடும்போதுதான் உடல் உஷ்ணம் அதிகமாகுமே தவிர, அளவோடு எடுத்துக்கொண்டால் மாம்பழம் நம்மை அனைத்து நோய்களில் இருந்தும் காக்கிறது.