7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களிடம், விடுதி, பயிற்சிக் கட்டணம் உட்பட எந்தவித கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது என அரசு, தனியார், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டிருக்கிறது மருத்துவக் கல்வி இயக்குநரகம். மீறி வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது!