வியக்க வைக்கும் வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்கள்!

கோடைகாலங்களில் அதிகம் கிடைக்கும் வெள்ளரிக்காயில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருக்கிறது. அதிலும் கோடைகாலங்கள் சிறுநீர் துவாரங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்துகிறது வெள்ளரிக்காய்

கோடைகாலங்களில் அதிகம் கிடைக்கும் வெள்ளரிக்காயில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருக்கிறது. அதிலும் கோடைகாலங்கள் சிறுநீர் துவாரங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்துகிறது வெள்ளரிக்காய்

தமிழ்நாட்டில் எங்கே பயணம் செய்தாலும், இரயில்களில் பேருந்து நிலையங்களிலும் கூவிக்கூவி விற்கப்படும் வெள்ளரிக்காய் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது. எளிதாக நமக்கு கிடைத்துவிடுவதால் அதனுடைய மகத்துவத்தை யாரும் அறிந்துகொள்வதில்லை.

பெரும்பாலும் கோடைக்காலங்களில் ஏற்படும் தாகத்தைப் போக்க வெள்ளரிக்காயை நம்முடனே வைத்துக்கொண்டு பயணம் செய்யலாம். நாவறட்சியை போக்கி பசியை தூண்டுவதால், நம் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறது.

இரைப்பையில் ஏற்படும் புண்ணை குணப்படுத்துகிறது. மலச்சிக்களை குணப்படுத்துவதற்கான ஓர் அருமருந்து தான் வெள்ளரிக்காய். மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள், தினமும் இரண்டு வெள்ளரிக்காய்களை சாப்பிட்டால் குடல் சுத்தமாகும்.

அதேபோல பெரும்பாலானோருக்கும் பரவலாக ஏற்படும் பிரச்னை அல்சர். அதனைக் குணப்படுத்த இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்தி வந்தால் விரைவில் அல்சர் குணமாகும்.

வெள்ளரிக்காயில் சோடியம், கால்சியம், மெக்னீசியம், இரும்புச் சத்தும், பாஸ்பரஸ், கந்தகம், சிலிக்கான், குளோரின் போன்ற பல சத்துகள் உள்ளன. இதில் இருக்கும் எண்ணற்ற சத்துகள் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது. ரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது. வாய் துர்நாற்றத்தை போக்குகிரது. பல் ஈறுகளை பாதுகாக்கிறது, இன்சுலின் சுரக்க தேவையான ஹார்மோன்களை தூண்டுகிறது.

கோடை காலங்களில் சிறுநீர் துவாரங்களில் ஏற்படும் அரிப்பு வலி ஆகியவற்றை குணப்படுத்துகிறது வெள்ளரிப்பிஞ்சு. வெள்ளரிப் விதைகள் ஆண்மைப் பிரச்னைக்கு தீர்வு தருகிறது. கர்ப்பப்பை பிரச்னை, மாதவிடாய் பிரச்னை உள்ளிட்ட மனித உடலில் ஏற்படும் நூற்றுக்கணக்கான பிரச்னைகளை இந்த ஒரே வெள்ளரிக்காய் தீர்த்து வைக்கிறது.