அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறைகள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றம்? எந்த அமைச்சருக்கு என்ன துறை?

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருக்கும் நிலையில் அவர் கவனித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வேறு அமைச்சர்களுக்கு மாற்றுவதற்கு ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இந்நிலையில் இருதய பிரச்னை ஏற்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகளை வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்குவதற்கான பரிந்துரை கடிதத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார்.

அதனடிப்படையில் மின்சாரத்துறை, நிதியமைச்சர் தங்கம் தேன்னரசுவும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமியும் கூடுதலாக கவனிப்பார்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு எந்த துறையும் ஒதுக்கப்படாமல் அமைச்சராக நீடிப்பார்.