முரசொலி மாறன் பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

முரசொலி மாறன் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 90-வது பிறந்தநாளான இன்று கொண்டாடப்படுவதையொட்டி மதுரை சிலைமான் பகுதியில் உள்ள அண்ணா மன்றத்தில் முரசொலி மாறன் உருவப்படத்திற்கு தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் அமைச்சர்கள் பொன்முடி, மூர்த்தி, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் முரசொலி மாறன் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து முதல்-அமைச்சரிடம் மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதன்பின்னர் மதுரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.