பயனர்களின் பயோமெட்ரிக் தகவல்களை சேகரிக்கும் எக்ஸ் – எலான் மஸ்க் கொண்டுவந்த புதிய அப்டேட்!

ட்விட்டரின் எக்ஸ் வலைதளத்தில் பயனாளர்களின் அனுமதியுடன் பயோமெட்ரிக் தகவல்களை சேகரித்து வரும் எக்ஸ்

கடந்த வருடம் அக்டோபர் மாதம் ட்விட்டர் வலைதளத்தை வாங்கினார் தொழிலதிபர் எலான் மஸ்க். அதில் இருந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். ஜூலை பிற்பகுதியில், டுவிட்டரின் லோகோ மாற்றப்பட்டு ‘எக்ஸ்’ சமூக வலைதளமாக மாறியது.

கடந்த ஆகஸ்ட் மாதம் வரை பாஸ்வேர்டு மூலமாக மட்டுமே உள்நுழைவதற்கான பாதுகாப்பு வசதிகளை வைத்திருந்த எக்ஸ் வலைதளம், தற்போது பயோமெட்ரிக் தகவல்களை சேகரித்து வருகிறது.

தற்போது பயனர்களின் ஒப்புதலின் அடிப்படையில் பாதுகாப்பு, மற்றும் அடையாள நோக்கங்களுக்காக உங்கள் பயோமெட்ரிக் தகவல்கள் சேகரிக்கப்படுகிறது என அதன் உரிமையாளர் எலான் மஸ்க் விளக்கம் அளித்து உள்ளார்.