நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளியில் வேலைவாய்ப்பு – 10வது, +2 படித்திருந்தால் போதும்!

நீலகிரியில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளியில் Stenographer, Lower Division Clerk, Driver உள்ளிட்ட வேலைகளுக்கு 44 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நீலகிரியில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளியில் Stenographer, Lower Division Clerk, Driver, Sukhani, Fireman, Cook, Technical Attendant, Multi Tasking Staff ஆகிய வேலைகளுக்கு 44 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Stenographer Grade – 2 வேலைக்கு 4 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுத வேண்டும். மேலும் 50 நிமிடங்களில் அதனை மொழிபெயர்க்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை ஊதியம் அளிக்கப்படும். 27 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும் வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

Lower Division Clerk வேலைக்கு 7 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை ஊதியம் அளிக்கப்படும். 27 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும் வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

Driver வேலைக்கு 5 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருடங்கள் ஓட்டுநர் பணியில் அனுபவம் இருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை ஊதியம் அளிக்கப்படும். 27 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும் வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

Sukhani வேலைக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, நீச்சல் பயிற்சியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் படகு ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை ஊதியம் அளிக்கப்படும். 25 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும் வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

Fireman வேலைக்கு 16 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தீயணைப்பு பயிற்சியில் 6 மாத சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவத்துடன் உடல் தகுதியையும் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை ஊதியம் அளிக்கப்படும். 27 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும் வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சமையலர் வேலைக்கு 3 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் சமையல் கலையில் சான்றிதழ் படிப்பு முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை ஊதியம் அளிக்கப்படும். 27 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும் வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

Printing Machine Operator பிரிவில் Technical Attendant வேலைக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, Printing Machine Operator பிரிவில் பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் Printing Machine
Operator ஆக 2 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை ஊதியம் அளிக்கப்படும். 25 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும் வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

Multi Tasking Staff வேலைக்கு 7 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை ஊதியம் அளிக்கப்படும். 25 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும் வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

www.dssc.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பிவைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
The Commandant,
Defence Services Staff College,
Wellington, Nilgiris – 643 231
Tamilnadu.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 23.