சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் அதிகாரி வேலை:மாதம் ரூ.80 ஆயிரம் சம்பளம்!

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் Deputy General Manager, Manager, Deputy Manager, Assistant Manager வேலைக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் பட்டம் பெற்றவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்….

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் Deputy General Manager, Manager, Deputy Manager, Assistant Manager வேலைக்கு 8 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Electrical & Mechanical) பிரிவில் Deputy General Manager வேலைக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளன.பணியமர்த்தப்படும் இடத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

Electrical & Mechanical பிரிவில் Manager வேலைக்கு 3 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு தொடர்புடைய துறையில் 7 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும். ரூ.80,000 ஊதியம் அளிக்கப்படும். இந்தப் பணிக்கு 38 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Environment பிரிவில் Manager வேலைக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு தொடர்புடைய துறையில் 7 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும். ரூ.80,000 ஊதியம் அளிக்கப்படும். இந்தப் பணிக்கு 38 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Electrical & Mechanical பிரிவில் Deputy Manager வேலைக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு தொடர்புடைய துறையில் 4 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும். ரூ.70,000 ஊதியம் அளிகப்படும். இந்தப் பணிக்கு 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Electrical & Mechanical பிரிவில் Assistant Manager வேலைக்கு ஒரு காலியிடமும், Environment பிரிவில் Assistant Manager வேலைக்கு ஒரு இடமும் காலியாக உள்ளது. இந்தப் பணிக்கு தொடர்புடைய துறையில் 2 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும். ரூ.60,000 ஊதியம் அளிக்கப்படும். இந்தப் பணிக்கு 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பிக்க, Electronics & Communication Engineering, Electrical Electronics Engineering, Mechanical Engineering, Environmental Engineering ஆகிய பாடப்பிரிவுகளில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

www.careers.chennaimetrorail.org என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 28.