பாகிஸ்தானில் இந்திய மருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதி அளித்த அந்நாட்டு ஒழுங்குமுறை ஆணையம்!

இந்திய மருந்துகளை இறக்குமதி செய்வதகு பாகிஸ்தானில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லைப் பிரச்னை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதில் இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் பாகிஸ்தானில் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் அதற்உ அனுமதி வழங்கியிருக்கிறது அந்நாட்டு மருந்து ஒழுங்குமுறை ஆணையம்.

அதுகுறித்து பாகிஸ்தான் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிவிக்கையில் “இறக்குமதி கொள்கை ஆணை 2022-ன் கீழ், இந்தியாவிலிருந்து உயிர்காக்கும் முக்கிய மருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

இதையடுத்து, இந்தியாவில் இருந்து புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளை மருத்துவமனைகள் அல்லது பொதுமக்கள் கொள்முதல் செய்வதற்கு இனி எந்த தடையும் இல்லை. அவ்வாறு இறக்குமதி செய்வதற்கு தடையில்லா சான்றுக்கு (என்ஓசி) விண்ணப்பிக்கலாம்.” என குறிப்பிடப்பட்டு உள்ளது.