பாகிஸ்தான் முன்னாள் அதிபர் இம்ரான்கான் கைது – அதிரடி நடவடிக்கையில் இறங்கிய ராணுவம்

இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான பாகிஸ்தான் முன்னாள் அதிபர் இம்ரான்கானை நீதிமன்றத்திற்குள் நுழைந்து கைது செய்தது பாகிஸ்தான் ராணுவம்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜரான அவரை, நீதிமன்றத்திற்குள் நுழைந்து ராணுவத்தினர் அதிரடியாக கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைது செய்தபோது அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும், அவரை கைது செய்ய விடாமல் அவருடைய வழக்கறிஞர்கள் தடுத்த நிறுத்தியதால் ராணுவத்தினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என்பதற்காக இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.