தமிழ்நாடு காவல்துறையில் காவல் சார்பு ஆய்வாளர் வேலை – ஏதாவது டிகிரி படித்திருந்தால் போதும்

தமிழ்நாடு காவல்துறையில் காவல் சார்பு ஆய்வாளர் வேலைக்கு 621 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 622 காவல் சார்பு உதவி ஆய்வாளர் வேலைக்கான தேர்விணை அறிவித்திருக்கிறது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்.இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஓர் இளநிலை பட்டம் பெற்றிருந்தால் போதும்.

இந்தப் பணிக்கு ரூ.36.900 முதல் ரூ.1,16.600 வரை ஊதியம் அளிக்கப்படும். 1.7.2023ம் தேதியின்படி பொது பிரிவினருக்கி 30 வயதுக்குள் இருக்க வேண்டும். பி.சி. எம்.பி.சி பிரிவினருக்கி 33 வயதுக்குள்ளும் எஸ்.சி. எஸ்.டி பிரிவினருக்கு 35 வயதுக்குள்ளும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.தகுதியானவர்கள் எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு, உடல் தேர்வு, உடற் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

www.tnusrb.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 1ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 30.