5 லிட்டர் ஆவின் பச்சை பால் பாக்கெட் விலை உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி!

5 லிட்டர் ஆவின் பச்சை பால் பாக்கெட் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

5 லிட்டர் எடை கொண்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.10 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 5 லிட்டர் எடை கொண்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.210க்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்று ரூ.10 அதிகரித்து ரூ.220க்கு விற்பனையாகிறது.

ஆவின் பால் விலை உயர்வால் டீக்கடை, உணவகங்களில் டீ மற்றும் காபி போன்றவற்றின் விலை உயரும் என தகவல். பிங்க் நிறத்தில் விற்பனை செய்யப்பட்ட பால் பாக்கெட்டை மஞ்சள் நிறத்தில் மாற்றவும் திட்டம் என தகவல்.