டாடா டிரஸ்ட் நிறுவனத்தின் தலைவரும் தொழிலதிபருமான ரத்தன் டாடாவுக்கு ‘ஆடர் ஆஃப் ஆஸ்திரேலியா’ விருதினை வழங்கி கவுரவித்த ஆஸ்திரேலிய தூதர்!
டாடா டிரஸ்ட் நிறுவனத்தின் தலைவரும் தொழிலதிபருமான ரத்தன் டாடாவுக்கு ஆஸ்திரேலியாவின் மிக உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா’ விருது வழங்கி கவுரவித்துள்ளது ஆஸ்திரேலிய அரசாங்கம்
இந்த விருதினை இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் ஃபேரி ஓ ஃபாரெல் ரத்தன் டாடாவை நேரில் சந்தித்து வழங்கியிருக்கிறார். விருது வழங்கியதற்கான புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஆஸ்திரேலிய தூதர், “வணிக, தொழில் மற்றும் பொதுச்சேவையில் தலைசிறந்தவர் ரத்தன் டாடா. அவரின் பங்களிப்பு ஆஸ்திரேலியாவில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தியிஉக்கிறது. ஆஸ்திரேலியா – இந்தியா நட்புறவில் அவரின் பங்கு மிக முக்கியமானது” என பாராட்டு தெரிவித்திருக்கிறார் ஃபேரி ஓ ஃபாரெல்.
-
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:
அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.900 கோடிக்கு ஒப்பந்தங்கள்: 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நோக்கியா, பேபால், ஈல்டு இன்ஜினீயரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப், இன்ஃபிங்ஸ், அப்ளைடுமெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர்ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோ…
-
78வது சுதந்திர தின விழா : டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு
இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி நாளை காலை 7.30 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். இது அவரது 11-வது சுதந்திர தின உரை ஆகும். இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழா, ‘வளர்ந்த பாரதம்’ என்ற கருப்பொருளில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே சுதந்திர தின…