+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணை தேர்வு – எப்போது விண்ணப்பிக்கலாம்?

+2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் துணை தேர்வுக்கு மே 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

கடந்த மார்ச் மாதம் நடந்த +2 தேர்வு முடிவுகளை நேற்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். மொத்தம் 8.17 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் அதில் 94% மாணவர்கள் தேர்ச்சி அடைந்திருந்தனர்.

ஆனால், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் உடனே தேர்வு எழுதி உயர்கல்வியில் சேர்வதற்கான அறிவிப்பை அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருக்கிறது. அதன்படி, +2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள்,துணைத் தேர்வுகளுக்கு மே 11ம் தேதி முதல் 17 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள், வருகைப்புரியாத தேர்வர்கள், தனித்தேர்வர்களுக்கான துணைத் தேர்வுகளுக்கு மே 11ம் தேதி முதல் 17 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு http://dge.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.