நிலவின் மேற்பரப்பில் 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள இருக்கும் ரோவர்: இஸ்ரோ பெருமிதத்துடன் அறிவிப்பு!

உலகமே உற்றுநோக்கிய ஓர் சாதனை நிகழ்வு நேற்று அரங்கேறியது. நிலவின் தென் துருவத்தில் கால் பதித்து உலக சாதனையை செய்தது இஸ்ரோ. நேற்று சரியாக மாலை 6.04 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இந்திய விஞ்ஞானிகள் பெரும் சாதனையான இந்நிகழ்வின் அடுத்தக்கட்ட நகர்வாக, விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய ரோவர், நிலவின் மேற்பரப்பில் நகரத் தொடங்கியிருக்கிறது. இது கிட்டத்தட்ட 14 நாட்களுக்கு நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்ய இருக்கிறது.

நிலவின் தென் துருவத்தில் உள்ள வெப்பநிலை, மண்ணின் தன்மை, நில அதிர்வுகளுக்கான வாய்ப்புகள் குறித்து ரோவர் ஆய்வு செய்யவுள்ளது. முதல் நாடாக நிலவின் தென் துருவத்தில் ஆய்வை மேற்கொண்டுள்ள இஸ்ரோ, உலக நாடுகள் அறியாத பல ரகசியங்களை வரும் நாள்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்பதால் ஆய்வு முடிவுகளை உலக நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன.