நிதி திரட்டுவதற்காக கடன் பத்திரத்தை வெளியிடும் எஸ்.பி.ஐ வங்கி!

ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பிலான கடன் பத்திரத்தை வெளியிடுவதற்கான பரிசீலனை நடைபெற்று வருவதாக எஸ்.பி.ஐ. வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் ரூ.3,717 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை எஸ்.பி.ஐ வங்கி வெளியிட்டிருந்த சூழலில் தற்போது ரூ.16,444 கோடி மதிப்பிலான கடன் பத்திரத்தை வெளியிடப்போவதாகவும் அதற்கான பரிசீலனை நடைபெற்று வருவதாகவும் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : கடன் பத்திர வெளியீடு மூலம் 200 கோடி டாலர் நிதி திரட்ட வங்கி பரிசீலித்து வருகிரது. இதற்கு வங்கியின் நிர்வாக வாரியமும் ஒப்புதல் அளித்திருக்கிறது.

ஓரே கட்டமாகவோ அல்லது பல கட்டங்களாகவோ இந்த கடன் பத்திரங்கள் வெளியிடப்படும். பொது மற்றும் தனி வெளியீடு மூலம் அமெரிக்க டாலர்களிலோ அல்லது மாற்றத்தக்க பிற நாணயங்களிலோ அந்தக் கடன் பத்திரங்களின் மதிப்பு இருக்கும். ஏப்ரல் மாதம் தொடங்கி அடுத்த நிதி ஆண்டு முடிவதற்கும் இந்த கடன் பத்திரங்கள் வெளியிடப்படும் என்று வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.