செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்!

செப்.18 முதல் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் தான் பல்வேறு சர்ச்சைகளுடன் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றது. மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன.

இந்நிலையில் மீண்டு சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற இருப்பதாக மத்திய அமைச்சர் அறிவித்திருக்கிறார். செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. சிறப்பு கூட்டத்தொடரில் 5 அமர்வுகள் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.