மத்திய அரசில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு SSC தேர்வு – +2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ஒன்றிய அரசு செயலகம், இரயில்வே, இந்திய தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வினை அறிவித்திருக்கிறது Staff Selection Commission.

ஒன்றிய அரசு மற்றும் இந்ஹிய தேர்தல் ஆணையத்தில் 2018, 2019ம் ஆண்டுகளில் காலியான பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வினை அறிவித்திருக்கிறது Staff Selection Commission.

Central Secretariat Stenographers, Indian Foreign Service Branch (B) Stenographers, Armed Forces Headquarters Stenographers, Railway Board Secretariat Stenographers, Election Commission of India Stenographers ஆகிய வேலைகளுக்கு 384 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Central Secretariat Stenographers வேலைக்கு மொத்தம் 342 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில், பொது பிரிவினருக்கு 265 இடங்களும், பட்டியலின பிரிவினருக்கு 51 இடங்களும், பழங்குடியின பிரிவினருக்கு 26 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். மேலும், தட்டச்சு, சுருக்கெழுத்துப் பயிற்சியில் Lower அல்லது Higher Grade முடித்திருக்க வேண்டும்.1.07.2018, 2019ம் ஆகிய தேதிகளின்படி 50 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதியானவர்கள் Computer Based Examination, Skill Test மற்றும் நேர்முகத்தேவின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

www.ssc.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த படிவத்தினை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பிவைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
Regional Director,
Staff Selection Commission (Northern Region),
Block No.12, C.G.O Complex,
Lodhi Road, New Delhi – 110 003

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நால் செப்டம்பர் 25.