State Bank Of India வங்கியில் Probationary Officers வேலை – 2 ஆயிரம் காலிப்பணியிடங்கள்!

State Bank Of India வங்கியில் Probationary Officers வேலைக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

State Bank Of India வங்கியில் Probationary Officers வேலைக்கு 2000 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கபப்ட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தற்போது இறுதியாண்டு படித்துக்கொண்டு இருக்கும் மாணவர்களும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படும்போது பட்டப் படிப்பை முடித்து சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் பனிக்கு மாதம் ரூ.63,000 ஊதியம் அளிக்கப்படும்.

இந்தப் பணிக்கு 21 வயதில் இருந்து 30 வயதிற்குள் இருப்ப்வர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது 02.04.1993ம் தேதிக்குப் பிறகும் 1.04.2022ம் தேதிக்கு முன்பும் பிறந்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்தின்றனாளிகளுக்கு 15 ஆண்டுகளும் வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வு தமிழ்நாட்டில், சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சை, திருச்சி, திருநெல்வேலி, விருதுநகர், வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும். நேர்முகத்தேர்வு சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும்.

பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வேலை செய்வதற்கான உறுதித்தொகை ரூ.2 லட்சம் சமர்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் “Probationary Officers” ஆக பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 2 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகே பணி நிரந்தரம் செய்யப்படும்.

www.sbi.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 27.