தமிழ்நாடு அரசின் இ-சேவை துறையில் eDistrict Manager வேலைக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசின் இ-சேவை துறையில் eDistrict Manager வேலைக்கு மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம், நாமக்கல், நாகப்பட்டினம், பெரம்பலூர், திருச்சி, வேலூர், விழுப்புரம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு காலிப்பணியிடம் என 8 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த தற்காலிக பணிக்கு அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
eDistrict Manager வேலைக்கு விண்ணப்பிக்க, Computer Science Engineering, IT, Information Communication Technology ஆகிய பாடப்பிரிவுகளில் பொறியியல் பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோல், MCA, Msc Computer Science, Msc IT, Msc Software Engineering ஆகிய முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
01.08.2023ம் தேதியின்படி 18 வயது முதல் 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியானவர்கள் எழுத்து தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
www.tnega.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 11.