மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.0 பதிவு – 296 பேர் பலி

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் 296 பேர் பலியாகியுள்ளனர்.

வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோ நாட்டில் நேற்று இரவு 11 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலி 7.0 ஆக பதிவாகியிருந்தது. இதனால் பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

இரவு நேரத்தில் நில நடுக்கம் ஏற்பட்டதால் ஆயிரக்கணக்காணவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. மீட்டு பணிகள் நடைபெற்று வரும் சூழலில், இதுவரை இதுவரை 296 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ள நிலையில் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.