கோவையில் 31ம் தேதி தொடங்கும் 11-வது ஆசிய ஜவுளி கருத்தரங்கம்!

தமிழ்நாடு அரசுடன் சிட்டி, சைமா அமைப்புகள் இணைந்து நடத்தும் 11-வது ஆசிய ஜவுளி கருத்தரங்கம் வருகிற 31ம் தேதி முதல் செப்.1ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

தமிழ்நாடு அரசுடன் இணைந்து சிட்டி, சைமா அமைப்புகளின் கீழ் பல்வேறு தேசிய, மாநில ஜவுளித்தொழில் அமைப்புகள் இணைந்து 11வது ஆசிய ஜவுளி கருத்தரங்கம் கோவையில் ஆகஸ்ட் 31ம் தேதி முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இதுகுறித்து சிட்டி மற்றும் சைமா அமைப்பு தலைவர்கள் கூறியதாவது, : 11-வது ஆசிய ஜவுளி கருத்தரங்கு கோவையில் வரும் 31-ம் தேதி காலை 9.30 மணியளவில் தொடங்கும். மாலை 4 மணியளவில் நடைபெறும் தொடக்க விழாவுக்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ்கோயல் தலைமை வகிக்கிறார்.

தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, ஜவுளித்துறை அமைச்சர் காந்தி, உணவு மற்றும் உணவு பொருட்கள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்ட பலர்பங்கேற்க உள்ளனர். 2 நாட்களும் பல்வேறு தலைப்புகளில் நடைபெறும் கருத்தரங்கில் வல்லுநர்கள் சிறப்புரையாற்றி தொழில்துறையினருடன் கலந்துரையாட உள்ளனர்.

இந்நிகழ்ச்சியை தேசிய மற்றும் மாநில ஜவுளி தொழில் அமைப்புகளான ஐடிஎம்எப், ஏஇபிசி, டெக்ஸ்புரோசில், சிஎம்ஏஐ, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், எச்இபிசி ஆகியவை இணைந்து நடத்த உள்ளன.

பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்படும் 11 சதவீத வரியை ரத்து செய்யாததால் ஒட்டுமொத்த ஜவுளி சங்கிலித்தொடரிலுள்ள அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, எம்எஸ்எம்இ பிரிவை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. இது குறித்து அமைச்சர்களிடம் கோரிக்கை வைக்கப்படும்.

ரேஸ்கோர்ஸ் பகுதியில்பழமை மாறாமல் நவீன தொழில்நுட்பங்களுடன் புனரமைக்கப்பட்ட ‘சைமா’ கட்டிடம், கருத்தரங்கு கூடம் ஆகியவற்றை மத்திய ஜவுளித்துறை அமைச்சர்பியூஷ்கோயல் 31-ம் தேதி திறந்து வைக்கிறார். தொடர்ந்துசைமா வளாகத்தில் நடைபெறும் பருத்தி உற்பத்தி மற்றும்நுகர்வுக்குழு கூட்டத்திலும் மத்திய அமைச்சர் சிறப்புரையாற்ற உள்ளார்” என தெரிவித்தனர்.