I.N.D.I.A கூட்டணியின் 3வது கூட்டம் இன்று மும்பையில் நடைபெறுகிறது!

I.N.D.I.A கூட்டணியின் 3வது ஆலோசனைக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெறுகிறது. முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சூழலில் பாஜகவை வீழ்த்துவதற்காக எதிர்கட்சிகள் ஒன்றினைந்து I.N.D.I.A என்ற கூட்டணியை உருவாக்கின. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இந்தக் கூட்டணியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதனுடைய முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது.

இரண்டாவது கூட்டம் ஜூலை மாதம் பெங்களூரில் நடைபெற்றது. அப்போது, கூட்டணியில் பெயரை I.N.D.I.A என ஒருமனதாக தேர்வு செய்தனர். இந்நிலையில் 3வது கூட்டம் இன்று மும்பையில் இன்று மாலை நடைபெற இருக்கிறது. இதில் கூட்டணிக்கான லோகோ வெளியிடப்படுகிறது. தொகுதி பங்கீடு குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிதாக 2 கட்சிகள் இணைந்துள்ளன. மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து திமுக உள்பட சுமார் 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இதனால், பாஜக அரசை வீழ்த்த இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், இன்று தொடங்க உள்ள 3வது ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.