மனைவியை சுட்டுக் கொலை செய்த அமெரிக்க நீதிபதி:ஒரு மில்லியன் டாலர்கள் பிணையில் ஜாமினில் விடுதலை!

மனைவியை சுட்டுக் கொண்ட அமெரிக்க நீதிபதியை ஒரு மில்லியன் டாலர் பிணையில் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணம் ஆரஞ்ச் நகரில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்திருக்கிறார் 72 வயதான ஜெஃப்ரி பெர்குசன். இவரது மனைவி பெயர் ஷெர்லி பெர்குசன். இவர்கள் அனஹிம் ஹில்ச் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய நேரப்படி நேற்று இரவு நீதிபதி ஜெப்ரி, அவருடைய மனைவி ஷெர்லியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்திருக்கிறார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகன் ஜெப்ரியன், உடனே கலிபோர்னியா காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை சடலத்தை கைப்பற்றி, ஆய்வு நடத்தியது. பின்னர் மனைவியை சுட்டுக் கொலை செய்த நீதிபதி ஜெஃப்ரி பெர்குசனை கைது செய்தனர். பின்னர் அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, 47 துப்பாக்கிக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

பின்னர் நீதிபதி ஜெஃப்ரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். வழக்கினை விசாரித்த நீதிபதிகள் ஜெஃப்ரியை ஒரு மில்லியன் டாலர்கள் பிணையில் ஜாமினில் விடுதலை செய்துள்ளனர். மேலும் மனைவியை கொலை செய்ததற்காக காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.