நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா: மேற்கிந்திய தீவுகள் அணிகள் இன்று மோதல்!

நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா: மேற்கு இந்திய தீவுகள் அணி இன்று மோதுகின்றன.

இந்தியா – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 4-வது டி 20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் லாடர்ஹில்லில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் லாடர்ஹில் நகரில் இன்று இரவு 4-வது போட்டி நடைபெறுகிறது.

இந்த ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடனே களமிறங்குகிறது. ஏனெனில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடர் 2-2 என சமநிலையை அடையும்.