அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள இந்திய நகைக்கடைகளை குறிவைத்து ஒரு கும்பல் கொள்ளையடித்திருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க், நியூ ஜெர்சி, வெர்ஜீனியா, புளோரிடா மற்றும் பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் இந்தியா மற்றும் தெற்காசிய நகைக்கடைகளை குறிவைத்து ஆயுதம் ஏந்திய கும்பல் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது.
இதுகுறித்து எஃப்பிஐ அமைப்பு விசாரணை நடத்தியது. விசாரணையில், ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த தொடர் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வந்தது தெரியவந்திருக்கிறது. அதன்பின்னர், கொள்ளையர்களைப் பிடிக்க தொடர் தேடுதல் வேட்டை நடந்திருக்கிறது. அப்போது ஆயுதங்களுடன் புளோரிடா மாகாணத்தில் பதுங்கியிருந்த கொள்லையர்களை எஃப்பிஐ சுற்றிவளைத்தது. அப்போது எதிர் தாக்குதல் நடத்திய கொள்ளையர்கள் அனைவரையும் கூண்டோடு கைது செய்தது காவல்துறை..
விசாரணையில் அவர்கள் கடந்த ஜனவரி 2022 முதல் இந்தாண்டு தொடக்கம் வரை 20-க்கும் மேற்பட்ட நகைக்கடைகளை நோட்டமிட்டு கொள்ளையடித்தது தெரிந்தது. இதுகுறித்து 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய செல்போன்கள், கார்கள், நவீன ஆயுதங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.