தொடர்ந்து இன்றும் பங்குச்சந்தை சரிவுடன் காணப்படும் பங்குச்சந்தை!

நேற்று சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை.. இன்று வர்த்தக நேரத்தின்போது 196 புள்ளிகள் சரிவடைந்தது.

இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 41 புள்ளிகள் சரிவடைந்து 65,497 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 21 புள்ளிகள் சரிந்து 19,444 ஆக இருந்தது.

காலை 10:11 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 196.51 புள்ளிகள் சரிவடைந்து 65,342.91 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 67.70 புள்ளிகள் சரிந்து 19,397.30 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டைட்டன் கம்பெனி, ஆக்ஸிஸ் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபின்சர்வ், மாருதி சுசூகி, டாடா ஸ்டீல், என்டிபிசி, இன்டஸ்இன்ட் பேங்க் நிறுவனங்களின் பங்குகள் உயவுடன் காணப்பட்டன.

மேலும், ஐடிசி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், நெஸ்ட்லே இந்தியா, இன்போசிஸ், டிசிஎஸ், எல் அண்ட் டி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மகேந்திரா, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐசிஐசிஐ பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், பாரதி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி பேங்க், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், கோடாக் மகேந்திரா நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.