நேற்று ஏற்றத்துடன் காணப்பட்டு பங்குச்சந்தை, இன்று சரிவுடன் தொடங்கியது.
இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 417 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 64,834 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 117 புள்ளிகள் வீழ்ந்து 19,268 ஆக இருந்தது.
காலை 10:21 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 411.06 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 64,841.28 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 65.55 புள்ளிகள் உயர்ந்து 19,321.15 ஆக இருந்தது.
தனிப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பொறுத்தவரை ஜியோ ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன் நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன.
ஜியோ ஃபைனான்ஸ், இன்டஸ்இன்ட் பேங்க், எல் அண்ட் டி, டெக் மகேந்திரா, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், டிசிஎஸ், ஐடிசி,ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பாரதி ஏர்டெல், நெஸ்ட்லே இந்தியா, இன்போசிஸ், விப்ரோ, எம் அண்ட் எம், ஐசிஐசிஐ பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், டைட்டன் கம்பெனி, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், என்டிபிசி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், கோடாக் மகேந்திரா பேங்க், பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.