இன்று ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை!

தொடர்ந்து வாரத்தின் இரண்டாவது நாளான இன்றும் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை.

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 56 புள்ளிகள் உயர்வடைந்து 66,009 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 21 புள்ளிகள் உயர்ந்து 19,618 ஆக இருந்தது.

காலை 10:17 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 39.27 புள்ளிகள் சரிவடைந்து 65914.21 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 4.80 புள்ளிகள் உயர்ந்து 19,602.10 ஆக இருந்தது.

தனிப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பொறுத்தவரை டெக் மகேந்திரா, விப்ரோ, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், டைட்டன் கம்பெனி, மாருதி சுசூகி, எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஆக்ஸிஸ் பேங்க், டாடா ஸ்டீல், கோடாக் மகேந்திரா பேங்க், என்டிபிசி, ஐசிஐசிஐ பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ் நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் இருக்கின்றன.

மேலும், பவர் கிரிடு கார்ப்பரேஷன், எம் அண்ட் எம், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா, பாரதி ஏர்டெல், இன்போசிஸ், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், இன்டஸ்இன்ட் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், டிசிஎஸ், ஐடிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.