வார முதல்நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது பங்குச்சந்தை.
இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 181 புள்ளிகள் உயர்வடைந்து 65,903 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 53 புள்ளிகள் உயர்ந்து 19,570 ஆக இருந்தது.
காலை10:10 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 167.47 புள்ளிகள் உயர்வடைந்து 65,888.72 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 27.90 புள்ளிகள் உயர்ந்து 19,544.90 ஆக இருந்தது.
தனிப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பொறுத்தவரை எம் அண்ட் எம், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், என்டிபிசி, அல்டரா டெக் சிமெண்ட், எல் அண்ட் டி, ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், மாருதி சுசூகி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ், பாரதி ஏர்டெல், டிசிஎஸ், விப்ரோ, ஐடிசி நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் இருந்தன.
மேலும், நெஸ்ட்லே இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், டைட்டன் கம்பெனி, ஆக்ஸிஸ் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா ஸ்டீல், கோடாக் மகேந்திரா, பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.