இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை!

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 285 புள்ளிகள் சரிவடைந்து 65,116 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 100 புள்ளிகள் சரிவடைந்து 19,334 ஆக இருந்தது.

காலை 10:18 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 127.15 புள்ளிகள் சரிவடைந்து 65274.77 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 56.60 புள்ளிகள் சரிந்து 19377.95 ஆக இருந்தது.

தனிப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பொறுத்தவரை இன்போசிஸ், ஐடிசி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மகேந்திரா, விப்ரோ, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், என்டிபிசி, எல் அண்ட் டி பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.

மேலும், இன்டஸ் இன்ட் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பாரதி ஏர்டெல், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், கோடாக் மகேந்திரா பேங்க், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எம் அண்ட் எம், பவர் கிரிடு கார்ப்பரேஷன், டிசிஎஸ், மாருதி சுசூகி, சன்பார்மா இன்ட்ஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.