இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை!

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிவடைந்து 65,745 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 14 புள்ளிகள் சரிந்து 19,556 ஆக இருந்தது.

காலை 10:00 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 259.45 புள்ளிகள் சரிவடைந்து 65,587.05 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 61.35 புள்ளிகள் சரிந்து 19,509.50 ஆக இருந்தது.

தனிப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பொறுத்தவரை எம் அண்ட் எம், பாரதி ஏர்டெல், டெக் மகேந்திரா, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், டைட்டன் கம்பெனி, டாடா மோட்டார்ஸ் பங்குகள் உயர்வில் இருந்தன.

மேலும், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டிசிஎஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஐடிசி, மாருதி சுசூகி, விப்ரோ, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், இன்டஸ்இன்ட் பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், என்டிபிசி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், பவர் கிரிடு கார்ப்ரேஷன், இன்போசிஸ், கோடாக் மகேந்திரா பேங்க், ஏசியன் பெயிண்ட்ஸ்,எல் அண்ட் டி, பஜாஜ் ஃபின்சர்வ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ் பங்குகள் சரிவில் இருந்தன.