ஸ்ரீரங்கம் கோவிலில் கிழக்கு கோபுரம் முதல் நிலையில் உள்ள சுவர் இடிந்து விழுந்தது.
தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சி ஸ்ரீரங்கம் கோவில். இந்த கோவிலின் கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை சுவர்கள் சில தினங்களாக விரிசல் ஏற்பட்ட நிலையில் காணப்பட்டன.
சுவரில் ஏற்பட்ட விரிசல்களை சரிசெய்ய அங்கு வேலைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், விரிசல் ஏற்பட்டிருந்த கிழக்கு கோபுரத்தின் முதல் நிலை சுவர் நள்ளிரவு 1.50 மணி அளவில் இடிந்து விழுந்தது. நள்ளிரவு நேரத்தில் சுவர் இடிந்ததால் அங்கு எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை.
கிழக்கு கோபுரம் முதல் நிலையில் உள்ள சுவர் இடிந்து விழுந்துள்ளதால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நள்ளிரவு நேரத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..