தமிழ்நாடு சிறைத்துறையில் உதவி ஜெயிலர் வேலை…

தமிழ்நாடு சிறைத்துறையில் காலியாக உள்ள 59 உதவி ஜெயிலர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு சிறைத்துறையில் காலியாக உள்ள 59 உதவி ஜெயிலர் வேலைக்கான தேர்வினை அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள 59 காலிப்பணியிடங்களில் ஆண்களுக்கு 55 இடங்களும், பெண்களுக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, 10ம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்புடன் இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

இந்தப் பணிக்கு ரூ.35,400 முதல் ரூ.1,30,400 ஊதியம் அளிக்கப்படும்.

32 வயதிற்குள் இருக்கிற பொது பிரிவினர் விண்ணப்பிக்கலாம். இதர பிரிவினருக்கு வயது உச்சவரம்பு கிடையாது.

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்று உடற்தகுதி தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் மே 11.