இன்று கனிசமான ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை!

இன்று 360 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை.

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 233 புள்ளிகள் உயர்வடைந்து 65,666 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 71 புள்ளிகள் உயர்ந்து 19,515 ஆக இருந்தது.

காலை 10:16 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 362.36 புள்ளிகள் உயர்வடைந்து 65,795.66 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி113.15 புள்ளிகள் உயர்ந்து 19,557.15 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் நிறுவனங்களைப் பொறுத்தவரை இன்டஸ்இன்ட் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஆக்ஸிஸ் பேங்க், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபின்சர்வ், ஐசிஐசிஐ பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், கோடாக் மகேந்திரா, இன்போசிஸ், பஜாஜ் பைனான்ஸ், டைட்டன் கம்பெனி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, விப்ரோ, எம் அண்ட் எம், டெக் மகேந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், நெஸ்ட்லே இந்தியா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, பாரதி ஏர்டெல் நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. ஜியோ பைனான்ஸ், என்டிபிசி பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.