சரிவுடன் தொடங்கிய இன்றைய பங்குச்சந்தை!

இன்று இந்திய பங்குச்சந்தை 76 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 76 புள்ளிகள் சரிவடைந்து 65,803 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 22 புள்ளிகள் சரிந்து 19,588 ஆக இருந்தது.

காலை 10:09 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 91.32 புள்ளிகள் சரிவடைந்து 65,789.20 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 21.70 புள்ளிகள் சரிந்து 19,589.35 ஆக இருந்தது.

நிறுவங்களின் தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை மாருதி சுசூகி, டாடா ஸ்டீல், எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஜியோ ஃபைனான்ஸ், டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.

பாரதி ஏர்டெல், ஐடிசி, ஹெச்டிஎஃப்சி பேங்க், விப்ரோ, பஜாஜ் ஃபின்சர்வ், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மகேந்திரா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், கோடாக் மகேந்திரா பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், டைட்டன் கம்பெனி, இன்போசிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், என்டிபிசி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், நெஸ்ட்லே இந்தியா, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், எம் அண்ட் எம், பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.