முதல் காலாண்டில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸின் மொத்த வருவாய்?

முதல் காலாண்டில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸின் மொத்த வருவாய் ரூ.307 கோடி!

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் 159 கிளைகள், 34 சாட்டிலைட் மையங்கள் உள்ளன. இந்நிறுவனத்தின் முதல் காலாண்டின் நிடிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்தாண்டு இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் செயல்பாட்டுடன் ஒப்பிடும்போது, கடன் அனுமதிகள் ரூ.691 கோடியிலிருந்து 5 சதவீதம் உயர்ந்து ரூ.726 கோடியாகியுள்ளது. கடன் வழங்கல் ரூ.642 கோடியிலிருந்து ரூ.684 கோடியாக உயர்ந்துள்ளது. இது 7 சதவீத வளர்ச்சியாகும்.

மொத்த வருவாய் ரூ.307 கோடியிலிருந்து 19 சதவீதம் அதிகரித்து ரூ.367 கோடியாக உள்ளது. நிகர வட்டி வருவாய் ரூ.137 கோடியிலிருந்து 5.1 சதவீதம் வளர்ந்து ரூ.162 கோடியாகியுள்ளது. நிகர லாபம் ரூ.62 கோடியிலிருந்து ரூ.89 கோடியாக உயர்வு பெற்றுள்ளது.

அதேசமயம் கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில், கடன் அனுமதி ரூ.966 கோடியிலிருந்து ரூ.726 கோடியாகவும், கடன் வழங்கல் ரூ.835 கோடியிலிருந்து ரூ.684 கோடியாகவும் குறைந்துள்ளது. ஆனால், மொத்த வருவாய் ரூ.344 கோடியிலிருந்து ரூ.366 கோடியாகப் பெருகியுள்ளது. நிகர வட்டி வருவாய் ரூ.155 கோடியிலிருந்து 5.1 சதவீத வளர்ச்சி பெற்று ரூ.162 கோடியாக உள்ளது. நிகர லாபம் ரூ.82 கோடியிலிருந்து 9% அதிகரித்து ரூ.89 கோடியாக உள்ளது.