இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

வருகிற செப்டம்பர் மாதம் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

2023ம் ஆண்டு ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அதன் அடிப்படையில் நாட்டின் பல்வேறு இடங்களில் ஜி 20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி-20 நாடுகளின் பிரிதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வருகிறார். செப்டம்பர் 10 ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபின் நாடு திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதுகுறித்து பேசிய தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க உதவி செயலாளர் டொனால்ட் லூ “செப்டம்பர் மாதம் இந்தியாவில் பயணம் மேற்கொள்ள ஜனாதிபதி ஜோ பைடன் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார். ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக அவர் இந்தியாவுக்குச் செல்லும் முதல் பயணம் இதுவாகும்.