ட்விட்டரில் வரும் விளம்பரத்தின் மூலம் பயனாளர்கள் பணம் சம்பாதிக்கலாம்! – எலான் மஸ்க் புதிய அறிவிப்பு

பயனாளர்களின் பதிவுகளுக்கு இடையே வரும் விளம்பரங்களின் மூலம் பயனாளர்கள் பணம் சம்பாதிக்கலாம் என அறிவித்துள்ளார் எலான் மஸ்க்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க் அதில் நிறைய மாற்றங்களை கொண்டுவந்திருந்தார். அதில் இனி ப்ளூ டிக் வைத்திருக்கும் அனைவரும் அதற்கான மாத சந்தாவை கட்ட வேண்டும் என அறிவித்திருந்தார். இது பெரும் விமர்சனங்களை உண்டாக்கியது. டுவிட்டரில் பிரபல பதிவர்கள் பலரும் ப்ளூ டிக் வைத்திருக்கும் நிலையில் அதில் இருந்து வருமானம் எதுவும் இல்லாத நிலையில் ப்ளூ டிக் அங்கீகாரத்திற்கு பணம் செலுத்துவது அபத்தமான விஷயம் என விசர்சித்தனர்.

இந்நிலையில் அங்கீகாரம் பெற்ற பயனாளர்களின் பதிவுகளுக்கு, பதில்கள் வரும் இடத்தில் விளம்பரங்களும் இடம்பெறும் என குறிப்பிட்டுள்ளார். இந்த விளம்பரத்தின் மூலம் ட்விட்டருக்கு கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட தொகை, பயனாளர்களுக்கு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார் எலான் மஸ்க். இதற்காக முதல்கட்டமாக 41 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.