ஓடிடியில் ரிலீஸ் ஆகும் விடுதலை!

குறைக்கப்பட்ட 20 நிமிட காட்சிகளுடன் இணைத்து ஓடிடியில் வெளியாகும் விடுதலை பாகம் – 1

இயக்குநர் வெற்றிமாறம் இயக்கத்தில் விடுதலை பாகம் -1 திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. பலரது பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் பெற்ற இந்த திரைப்படம் தெலுங்கு மொழியிலும் வெளியாகி நல்ல வசூலையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. தற்போது விடுதலை பாகம்- 2 திரைப்படத்திற்கான காட்சிகளையும் எடுத்து வருகிறார்கள்.

தியேட்டரில் வெளியிடுவதற்காக கதையில் இருந்த சில காட்சிகளை நீக்கி நேரத்தை குறைத்து வெளியிட்டிருந்தது படக்குழு. ஆனால், இப்போது விடுதலை திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. அதுவும் நேரக்கட்டுப்பாடு காரணமாக தியேட்டரில் வெளியிட 20 நிமிடங்கள் வரை காட்சிகளை குறைக்கப்பட்டு இருந்த சூழலில், இப்போது அந்த 20 நிமிட காட்சிகளையும் சேர்த்து திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடப்பட இருப்பதாக தவல்கள் வெளியாகி இருக்கிறது.

விரைவில் விடுதலை பாகம் -2 திரைப்படமும் வெளியாகும் என சொல்லப்படுகிறது.