பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான எல்லா நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசுமுன்னுரிமை அளிக்கும் என தெரிவித்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஜி20 உச்சி மாநாட்டில் நேற்று பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது “பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதே அரசின் முதன்மையான நடவடிக்கை. அதற்காக, வட்டி விகிதங்களை உயர்த்துவது மட்டுமே தீர்வாக அமையாது.

பல வழிமுறைகளில் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதலீடு செய்ய பன்னாட்டு நிறுவனங்களுக்கு மிகவும் சாதகமான சூழல் நிலவுகிறது. இந்திய பொருளாதாரத்தின் ஒவ்வொரு அங்கமும் சிறப்பான அளவில் வளர்ந்து வருகிறது.” என பேசினார்.