“கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்…”- முதல் அமைச்சர் மு. க . ஸ்டாலின் ட்வீட்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் 2006-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, கோயில் அர்ச்சகராக விரும்பும் அனைத்து சாதியினருக்கும் பயிற்சி அளிப்பதற்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பாடசாலைகள் தொடங்கப்பட்டன. 

பல போராட்டங்களுக்கு பிறகு இந்தச ஆணை நிறைவேற்றப்பட்டது. பல மாவட்டங்களில் அவர்களுக்கான பாடசாலைகள் தொடங்கப்பட்டு பயிற்சி நடைபெற்றது. தற்பொழுது அதில் மூன்று பெண்கள் நிறைவு சான்றிதழ் பெற்று உள்ளனர். அதற்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்து உள்ளார்.

அவர் பதிவில் “பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது.

ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது #திராவிடமாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்…” கருவை சுமப்பது மட்டுமல்ல கோவில் கருவறையில் இருப்பது பெண்களின் கடமை என்பதை உணர்த்துவதே இதன் நோக்கம்.