இளைஞர்களிடையே பிரபலமான Yamaha R15 V4 மாடலில் புதிய நிறங்கள் அறிமுகம்!

இந்திய சந்தையில் பிரசத்தி பெற்ற ஃபேரிங் ஸ்டைல் ஸ்போர்ட்டிவ் பைக் மாடலான யமஹா R15 V4 மாடலில் 2024 ஆம் ஆண்டிற்கான புதிதான நிறங்கள் சேர்க்கப்பட்டு ரூ.1.84 லட்சம் முதல் ரூ.1.89 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கின்றது.

இந்த மாடலை தவிர யமஹா FZ-X, FZ-S Fi,  FZ-S Fi V3, FZ-S Fi V4 DLX ஆகிய மாடல்களிலும் புதிய நிறங்களை கொண்டு வந்துள்ளது.

2024 Yamaha R15 V4

இந்தியாவில் கிடைக்கின்ற சிறந்த ஸ்போர்ட்டிவ் மாடலான R15 V4 பைக்கில் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் பெற்று புதிய ‘விவிட் மெஜந்தா மெட்டாலிக் நிறம் யமஹாவின் ப்ளூ ஸ்கொயர் அவுட்லெட்டுகளில் பிரத்தியேகமாக கிடைக்கும் தற்போதுள்ள ரேசிங் ப்ளூ மற்றும் மெட்டாலிக் ரெட் நிறங்களில் சிறிய அளவிலான பாடியில் ஸ்போர்ட்டியர் கிராபிக்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

மற்றபடி, புதுப்பிக்கப்பட்ட நிறங்களுடன் வெள்ளை மற்றும் டார்க் நைட் ஆகியவற்றுடன் 5 நிறங்களை பெற்றுள்ளது.

இந்நிறுவனம் R15ல் வேறு எந்த இயந்திர மாற்றங்களையும் செய்யவில்லை. R15 மாடலில் தொடர்ந்து இடம்பெற்றுள்ள 155cc, லிக்விட்-கூல்டு, நான்கு வால்வு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் 18.1 bhp மற்றும் 14.2Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் சிலிப்பர் அசிஸ்ட் உடன் கூடிய 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

ஏரோடைனமிக் பாடி வடிவமைப்பினை பெற்ற யமஹா ஆர்15 பைக்கில் முன்புறம் யூஎஸ்டி ஃபோர்க்குடன் 100/80-17M/C 52P டயர் கொண்டு 282 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் 140/70R17M/C 66H ரேடியல் டயருடன் 220 மிமீ டிஸ்க் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது. முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டரில் Y-Connect ஆதரவினை பெற்றுள்ளதால் பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெறக்கூடும்.

2024 Yamaha R15 V4 price list

R15 V4Vivid Magenta Metallic, Racing Blue, INTENSITY WHITERs. 1,88,539
R15 V4Dark KnightRs. 1,84,539
R15 V4Metallic RedRs. 1,83,539
  • Slider 1

  • Slider 2

  • Slider 3

  • Slider 4

  • Slider 5